Published : 04 Oct 2021 07:31 AM
Last Updated : 04 Oct 2021 07:31 AM

லட்சத்தீவில் வசிக்கும் முஸ்லிம்களின் தேசபக்தியை சந்தேகிக்க முடியாது: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து

புதுடெல்லி

லட்சத்தீவில் வசிக்கும் முஸ்லிம் களின் தேசபக்தியை யாரும் சந்தேகிக்க முடியாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு லட்சத்தீவின் தலைநகர் கவரட்டியில் காந்தியின் உருவச் சிலையை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். லட்சத்தீவில் திறந்து வைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் முதல் சிலை இதுவாகும். சிலை திறப்பு நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

லட்சத்தீவில் மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைப்பதில் பெருமை அடைகிறேன். லட்சத்தீவு ராணுவ ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. இதன் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. லட்சத்தீவை இன்னொரு மாலத்தீவு போல மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. லட்சத் தீவில் வசிக்கும் முஸ்லிம்களின் தேசபக்தியை யாரும் சந்தேகிக்க முடியாது.

லட்சத்தீவின் முக்கியத்து வத்தை கருத்தில் கொண்டு, சில இந்திய எதிர்ப்பு சக்திகள் இங்கு இடையூறுகளை உருவாக்க முயற்
சிக்கின்றன. மக்களைத் தூண்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அவை வெற்றிபெறவில்லை.லட்சத்தீவில் உள்ள முஸ்லிம் மக்களின் தேசபக்தியை யாரும் சோதிக்கத் துணியக் கூடாது.

உலகின் மீது மிகப்பெரிய சாதகமான தாக்கங்களை 20-ம்நூற்றாண்டில் மகாத்மா காந்தி ஏற்படுத்தி இருந்தார். என்றாலும் 21-ம் நூற்றாண்டிலும் அவரது கொள்கைகள் நமக்குத் தேவைப்படுகின்றன. இன்று உலகம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு காந்திய வழியை நாம் அணுக வேண்டி உள்ளது. வறுமை மற்றும் சமத்துவமின்மை, பருவநிலை மாற்றம், தீவிரவாதம் ஆகிய மூன்றும் உலகின் முக்கிய சவால்களாக உள்ளன.

இவற்றுக்கு காந்திய கொள்கைகளின் வழியிலேயே தீர்வு காண முடியும். சமூகத் தில் நலிவடைந்த பிரிவினரை உயர்த்துவது மட்டுமின்றி அவர் களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நோக்கமாகக் கொண்டு அதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரு கிறது.

மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி ஏழ்மையிலும் ஏழ்மையாக இருப்பவர் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை
யைப் பெற பிரதமர் நரேந்திர மோடி பணியாற்றி வருகிறார்.

இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x