

இந்தியாவில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 22,842ஆக பதிவாகியுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 13,217 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுபோலவே நேற்று ஒரே நாளில் 244 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில் அவர்களில் 121 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்ள் ஆவர்.
கடந்த 199 நாட்களில் இல்லாத அளவாக சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,70,557 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 22,842
இதுவரை குணமடைந்தோர்: 3,30,94,529
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 25,930
கரோனா உயிரிழப்புகள்: 4,48,817
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 244
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 2,70,557
இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 90,51,75,348
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.