

பெங்களூருவில் உள்ள ஹோட்டல் ஒன்று, இட்லியை குச்சிஐஸ்கிரீமை போல வடிவமைத்திருக்கிறது. அதாவது, சாக்கோ பார் ஐஸ்கிரீமை போன்று இட்லி வடிவமைக்கப்பட்டு அது குச்சியில் சொருகி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு அருகே சாம்பார், சட்னிஆகியவை கின்னத்தில் வைக்கப்பட்டுள்ளன. கையில் படாமல்அதே சமயத்தில் வேகமாக சாப்பிட இயலும் வகையில் இந்தஇட்லிக்கள் வடிவமைக்கப்பட்டி ருக்கின்றன.
இந்த ஐஸ்கிரீம் இட்லியை வாடிக்கையாளர் ஒருவர் புகைப்படம் எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பதிவிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கானோர் இந்தப் புகைப்படத்தைபார்த்துள்ளனர். ஆயிரக்கணக்கான முறை இது ரீ-ட்வீட்டும் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான பிரபலங்களும் இந்த இட்லியை வடிவமைத்தவரின் புதிய சிந்தனையை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக, மகிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பதிவில், “ஆராய்ச்சித் துறையின் தலைநகரமாக அறியப்படும் பெங்களூரு, உணவுத்துறையிலும் தனது புதிய சிந்தனையை புகுத்தியுள்ளது. ஐஸ்கிரீம் இட்லி அனைவரையும் கவர்ந்திருக்கிறது" எனக் கூறியுள்ளார்.