உருது நூலாசிரியர்களிடம் உறுதிமொழி பெறும் உத்தரவால் சர்ச்சை: சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்க அரசு முடிவு

உருது நூலாசிரியர்களிடம் உறுதிமொழி பெறும் உத்தரவால் சர்ச்சை: சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்க அரசு முடிவு
Updated on
2 min read

தேச விரோத கருத்து தொடர்பாக உருது நூலாசிரியர்கள் உறுதி மொழி அளிக்க வேண்டும் என்ற உத்தரவு காரணமாக சர்ச்சை எழுந் துள்ள நிலையில், இது தொடர்பாக சட்ட நிபுணர்களின் கருத்துகளை கேட்க மத்திய அரசின் உருது வளர்ச்சி கவுன்சில் முடிவு செய் துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உருது மொழி வளர்ச்சிக்கான தேசிய கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இந்த கவுன் சில் சார்பில் உருது நூல்கள் அதிக எண்ணிக்கையில் விலைக்கு வாங்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த நூலாசிரியர்கள் தங்கள் நூலில் நாடு மற்றும் அரசின் கொள் கைக்கு எதிரான கருத்துகளோ அல்லது கலவரத்தை தூண்டும் வகையிலான வார்த்தைகளோ இல்லை என்று எழுத்து மூலம் உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று உருது வளர்ச்சி கவுன்சில் சில நாட்களுக்கு முன் உத்தர விட்டது. இந்த உத்தரவு சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து இந்த உத்தரவு குறித்து உருது வளர்ச்சி கவுன்சிலின் அடுத்த நிர்வாகக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி நேற்று கூடிய நிர்வாகக் குழு கூட்டத்தில் சர்ச்சைக் குரிய உத்தரவு குறித்து சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டபின் இறுதி முடிவு எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் உருது கவுன்சில் அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “கடந்த ஆண்டு பெறப்பட்ட ஒரு நூலில், மவுலானா அபுல் கலாம் ஆசாத் பஞ்சாபில் பிறந்தார் என தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மீது நடைபெற்ற விசாரணையில் அதன் ஆசிரியர், வேறொரு நூலி லிருந்து எடுத்து இதை குறிப் பிட்டதாக கூறினார். இதனால் ஏற்கெனவே பெறப்பட்டு வந்த உறுதிமொழியில் சில பிரிவுகளை புதிதாக சேர்த்தோம். மத்திய அரசு நிறுவனங்களான தூர்தர்ஷன் தொலைக்காட்சி, அகில இந்திய வானொலி ஆகியவற்றின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடமும் இந்த உறுதிமொழி பெறப்படுகிறது” என்றார்.

உருது வளர்ச்சி கவுன்சில் நிர்வாகக் குழு தலைவரான மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதற்கு பிற அலுவல்கள் காரண மாகக் கூறப்பட்டது.

முன்னதாக, சர்ச்சை எழுந்த வுடன் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “நூலா சிரியர்களிடம் உறுதிமொழி பெறு வது புதிதல்ல. கடந்த ஆண்டு ஒரு நூலில் இருந்த தவறான தகவல் காரணமாக இந்த உறுதிமொழியில் சில பிரிவுகளை உருது வளர்ச்சி கவுன்சில் மாற்றி அமைத்துள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.

என்றாலும் வேறு எந்த மொழிக் கும் பிறப்பிக்கப்படாத இந்த உத்தரவு உருது நூலாசிரியர் களின் சுதந்திரத்தை பறிக்கும் முயற்சி என எதிர்ப்பு தொடர்கிறது.

இது குறித்து உருது நூலாசிரி யர்களில் ஒருவரான அப்துல்லா தானிஷ் ‘தி இந்து’விடம் கூறும் போது, “மத்திய அரசு தனது கொள்கையை புகுத்தும் செயல் இது. உருது மொழியை முஸ்லிம் கள் அதிகம் பயன்படுத்தினாலும் அது அனைத்து மதத்தினருக்கும் சொந்தமானது.

பாகிஸ்தானின் அரசு மொழியாக உருது அறிவிக் கப்பட்டதில் இருந்து இது இந்தியா வில் முஸ்லிம்களுடன் இணைத்து பார்க்கப்படுகிறது. இதனால் உருது நூலாசிரியர்கள் தாங்கள் தேசவிரோதிகள் அல்ல என்று நிரூபிக்க வேண்டியது கட்டாயம் என்பது போல் அவர்களிடம் உறுதிமொழி பெற முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in