

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26,727 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக அன்றாட பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 277 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 26,727 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 28,246 பேர் தொற்றிலிருந்து
குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 277 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை பதிவான மொத்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை: 3,37,66,707
கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை: 3,30,43,144
நாடு முழுவதும் இதுவரை கரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை: 4,48,339
நாடு முழுவதும் தற்போது கரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை: 2,75,224
இதுவரை நாடு முழுவதும் 89,02,08,007 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64,40,451 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26,727 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், கேரளாவில் மட்டுமே 15,914 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 122 பேர் உயிரிழந்தனர்.