

ஃபேஸ்புக்கில் அம்பேத்கர் குறித்த ஆட்சேபணைக்குரிய படங்களை சிலர் பரப்பியதால், மகாரஷ்டிரத்தில் வன்முறை வெடித்தது. இதில் அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.
மகாராஷ்ட்ரத்தில் கடந்த வாரம் மராட்டிய மன்னர் சிவாஜி ராவ் மற்றும் சிவ சேனைத் தலைவர் பால் தாக்கரே ஆகியோரை இழிவுப்படுத்தும் விதமாக ஃபேஸ்புக்கில் சில படங்கள் கசியவிடப்பட்டன. இதனை அடுத்து அங்கு இந்து ராஷ்ட்ர சேனை அமைப்பினர் மேற்கொண்ட வன்முறைச் சம்பவத்தில் மொசின் ஷேக் என்ற தொழில்நுட்ப வல்லுநர் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று மீண்டும் ஃபேஸ்புக்கில, அம்பேத்கர் குறித்து அவதூறு ஏற்படுதும் விதமாக சில படங்கள் வெளியிடப்பட்டன. இதனை தொடர்ந்து புனே, சோலாப்பூர், அவுரங்காபாத் ஆகிய இடங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதில் அரசு பேருந்துகள் பலத்த சேதமடைந்தன.
ஃபேஸ்புக்கிய அவதுறாக பதவேற்றம் செய்யப்பட்ட கம்ப்யூட்டரின் ஐ.பி எண் குறித்த தகவலை தரும்படி, மகாராஷ்டிர காவல்துறை ஆணையம் ஃபேஸ்புக் நிறுவனத்தை தொடர்புக் கொண்டுள்ளது. மகாராஷ்டிராவில் தொடர்ந்து நடைபெறும் வகுப்புவாத வன்முறை குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு மாநில அரசை, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.