

மக்கள்தொகையில் 25 சதவீதம் பேர் அதாவது 23.7 கோடி மக்களுக்கு 2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோ தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 88 கோடியைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 65,34,306 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 85,92,824 முகாம்களில் 88,34,70,578 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:
"இந்தியாவின் விடாமுயற்சியும் உறுதியும் உலகளாவிய தடுப்பூசி பிரச்சாரத்தில் அலைகளை உருவாக்குகிறது. தகுதியுள்ள மக்கள்தொகையில் 25 சதவீதம் பேர் அதாவது 23.7 கோடி மக்கள், கரோனாவுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்படப்பட்டுள்ளனர். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்”என்று மாண்டவியா ட்வீட் செய்துள்ளார்.