

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 23,529 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 311 பேர் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 18,870 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது. தொற்று பரவல் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருந்தது நல்ல முன்னேற்றமாக பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 23,529 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 23,529 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 28,718 பேர் தொற்றிலிருந்து
குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 311 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை பதிவான மொத்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை: 3,37,39,980
கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை: 3,30,14,898
நாடு முழுவதும் இதுவரை கரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை: 4,48,062
நாடு முழுவதும் தற்போது கரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை: 2,77,020
இதுவரை நாடு முழுவதும் 88,34,70,578 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 65,34,306 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 23,529 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், கேரளாவில் மட்டுமே 12,161 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 115 பேர் உயிரிழந்தனர்.