Published : 30 Sep 2021 07:43 AM
Last Updated : 30 Sep 2021 07:43 AM

இந்தியாவின் அதிவேக பைக் பந்தய வீராங்கனை கல்யாணி

புதுடெல்லி

இந்தியாவின் அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்27 வயதான கல்யாணி பொடேகர்.

சமீபத்தில் என்சிஆரின் புத்தா இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில், 2.08 நிமிடங்களில் இலக்கை கடந்து அசத்தினார் கல்யாணி பொடேகர். இதன் மூலம் இந்தியாவின் அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்திருந்தார் கல்யாணி பொடேகர். இதற்குமுன்னர் கல்யாணி 2.16 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்திருந்தார். இந்த சாதனையை தற்போது டுகாட்டி பனிகல் வி 4 சூப்பர் பைக் மூலம் முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து கல்யாணி பொடேகர் கூறும்போது, “மோட்டார் சைக்கிள்கள், ஓட்டப்பந்தயம், வேகம் இவை அனைத்தும் என்னை கவர்ந்தது. மற்ற குழந்தைகள் சைக்கிளில் மிதிப்பது எப்படி என்று கற்றுக் கொண்டிருந்த வயதில், நான் 9 வயதிலேயே துல்லியமாக இருக்க கனரக இயந்திரங்களை இயக்கிக் கொண்டிருந்தேன். என் கால்கள் சரியாக தரையை தொடாத நிலையில் அப்பாவின் ஆர்எக்ஸ் 100 பைக்கை ஓட்டத் தொடங்கினேன். எனது அப்பா பின்னால் அமர்ந்து கொண்டு கியர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என கற்றுக்கொடுத்தார்.

நான் வளர்ந்தவுடன், பைக்பந்தயத்தில் பங்கேற்க விரும்பினேன். பின்னர் 2017 ல், நான் கலிபோர்னியா சூப்பர்பைக் பள்ளியில் பயிற்சி பெற்றேன், பைக்கை நான் நன்றாக நிர்வகிக்க மற்றும் சவாரி செய்ய முடிந்தாலும், என் கால்கள் தரையை எட்டாததால் தெளிவற்ற காரணத்தைக் கூறி, ஒரு குறிப்பிட்ட பிராண்ட் மோட்டார் சைக்கிளை சவாரி செய்ய எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஒரு வருடம் கழித்து, அதே பைக்கில் நான் சென்றபோது எனக்குவாய்ப்பு வழங்க மறுத்த அதே நபர் என்னுடன் செல்ஃபி எடுத்தார். எனது அத்தைகூட இந்த பைக்கிற்கு எப்படி பெட்ரோல் நிரப்புவாய்? அதனால் நீ வேலைக்குச் செல் என ஏளனமாக கூறுவார். அவர்களது கருத்துகளை எடுத்துக் கொண்டு அவர்கள் மீதே அடியெடுத்து வைத்து முன்னேறிச் செல்ல வேண்டும்” என்றார்.

கல்யாணி பொடேகர் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். உலகின் உயரமான பந்தயமான ரைடுடி ஹிமாலயா, இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் கிளப் ஆதரவளிக்கும் இந்திய தேசிய ரேசிங் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் கல்யாணிகலந்து கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x