

டெல்லியில் 50 ஆண்டுகள் பழமையான 4 மாடி கட்டிடம் ஒன்று சனிக்கிழமை இடிந்து விழுந்ததில் 10 பேர் இறந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
வடக்கு டெல்லியின் இந்தர்லோக் பகுதி யில், நெரிசல் மிகுந்த துல்சி நகரில் அமைந்த இந்தக் கட்டிடத்தில் பல குடும் பங்கள் வசித்து வந்தன. இந்நிலையில் சனிக்கிழமை காலை 8.55 மணியளவில் இந்தக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந் தது. தகவலின் பேரில் தீயணைப்பு துறை யினர் அங்கு விரைந்து மீட்பு பணிகளை தொடங்கினர். இதில் 5 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 10 பேரின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக துணை போலீஸ் கமிஷனர் மாதூர் வர்மா கூறினார். விபத்தை தொடர்ந்து டெல்லி மாநகராட்சியின் கரோல்பாக் மண்ட லத்தைச் சேர்ந்த 2 பொறியாளர்கள் சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விபத்து குறித்து, மாநகராட்சி கூடுதல் ஆணையர் (பொறியியல்) தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி அதிகாரிகள் முறைகேடு கள் செய்திருப்பது தெரியவந்தால் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று மாநகராட்சி கூறியுள்ளது.
அடுத்த கட்டிடத்தில் நடைபெற்றுவந்த கட்டுமானப் பணியே விபத்துக்கு காரண மாக இருக்கலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். “இந்தக் கட்டிடம் 50 ஆண்டுகள் பழமை யானது. இது அங்கீகரிக்கப்படாத கட்டிடம். இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது” என்று அதிகாரிகள் கூறினர்.