Published : 29 Sep 2021 10:57 AM
Last Updated : 29 Sep 2021 10:57 AM

முதுநிலை நீட் தேர்வு 2021 முடிவுகள் வெளியீடு

2021 ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு (National Eligibility cum Entrance Test, Postgraduate – NEET PG 2021) முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை மாணவர்கள் nbe.edu.in.NBE என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதியன்று முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 260 நகரங்களில் 800 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியான விவரத்தை NBE தேசிய கல்வி வாரியம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக உறுதிப்படுத்தியது.

நீட் முதுநிலை 2021 தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்வது எப்படி?

1. nbe.edu.in. என்ற இணையதளத்திற்குச் செல்லவும்
2. முகப்புப் பக்கத்தில் 'NEET PG 2021' என்றிருக்கும் பட்டையை சொடுக்கவும்
3. தேர்வு குறித்த அனைத்து விவரங்களும் உள்ளடக்கிய பக்கம் ஒன்று திறக்கும்.
4. அந்தப் பக்கத்தில் 'NEET PG 2021 Results' என்ற இணைப்பை சொடுக்கவும்.
5. பின்னர் அதில் உங்கள் பதிவு எண் மற்றும் கடவுச் சொல்லை தட்டச்சு செய்யவும்.
6. அவ்வாறு செய்ய நீட் தேர்வு முடிவு திரையில் தெரியும்.
7. தேர்வு முடிவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லையே பிரின்ட் செய்தும் கொள்ளலாம்.

கட் ஆஃப் மார்க் எவ்வளவு?

பிரிவு குறைந்தபட்ச மதிப்பெண் கட் ஆ மதிப்பெண் (800க்கு)
பொதுப் பிரிவு 50th Percentile 302
எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி
40th Percentile 265
UR-PwD 45th Percentile 283

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x