Published : 28 Sep 2021 12:07 pm

Updated : 28 Sep 2021 12:07 pm

 

Published : 28 Sep 2021 12:07 PM
Last Updated : 28 Sep 2021 12:07 PM

3 மக்களவை, 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் தேதி அறிவிப்பு

bypolls-to-three-ls-30-assembly-seats-on-oct-30-ec
கோப்புப்படம்

புதுடெல்லி 

நாட்டில் 3 மக்களவைத் தொகுதிகள், 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 30-ம் தேதி நடக்கும் எனத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 2-ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

''நாட்டில் கரோனா தொற்று, மழை வெள்ளம், பண்டிகைக் காலம், குறிப்பிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்காலம் ஆகியவற்றை ஆய்வு செய்து, அனைத்துச் சூழல்களையும் கருத்தில் கொண்டு காலியாக இருக்கும் 3 மக்களவைத் தொகுதிகள், தாத்ரா நாகர் ஹாவேலி, டாமன் டையூ, மத்தியப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காலியாக இருக்கும் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது. இதன்படி இடைத் தேர்தல் அக்டோபர் 30-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 2-ம் தேதியும் நடக்கும்''.

இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


தவறவிடாதீர்!



BypollsHree Lok Sabha seats30 assembly constituenciesElection CommissionOctober 30தேர்தல் ஆணையம்இடைத் தேர்தல்3 மக்களவைத் தொகுதிகள்30 சட்டப்பேரவைத் தொகுதிகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x