

உச்ச நீதிமன்றத்தில் புதிதாகநியமிக்கப்பட்ட 9 நீதிபதிகளுக்கு பாராட்டு விழா உச்ச நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர்கள் சார்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு என்.வி. ரமணா பேசியதாவது:
நமது சமுதாயத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெண்கள் ஒடுக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் 30 சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே பெண் நீதிபதிகள் உள்ளனர். உயர் நீதிமன்றங்களில் 11.5 சதவீதமும், உச்ச நீதிமன்றத்தில் 11 முதல் 12 சதவீதமும் பெண் நீதிபதிகள் உள்ளனர்.
நீதிபதி பணியிடங்களில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். நீதித்துறையிலும், சட்டக் கல்லூரிகளிலும் இட ஒதுக்கீடு கேட்பது பெண்களின் உரிமை. இதை அவர்கள் கேட்டு பெற வேண்டும் என்றார்.