

அசாம் மாநிலம் தாகுவாகோனா வில் பாஜக சார்பில் நேற்று நடை பெற்ற பிரச்சார கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா பேசியதாவது:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் தேர்தல் பிரச் சாரத்துக்காக இங்கு வர உள்ள னர். அப்போது, வங்கதேச ஊடுரு வலைத் தடுக்க நடவடிக்கை எடுப் போம் என்று அவர்களால் சொல்ல முடியுமா? முடியாது. ஏனென்றால், வங்கதேச ஊடுருவல்காரர்களை தங்களது வாக்கு வங்கியாக காங் கிரஸ் கட்சி பயன்படுத்தி வரு கிறது.
அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கதேச எல்லையை மூடுவோம். இதன் மூலம் வங்கதேசத்தினரின் ஊடுரு வல் பிரச்சினை முடிவுக்கு வரும். வங்கதேசத்தினரின் ஊடுருவல் அசாம் மாநிலத்துக்கு மட்டுமல்லா மல் நாட்டுக்கே பெரும் பிரச்சினை யாக உள்ளது.
மேலும் சுதந்திரத்தின்போது அசாம் மாநிலத்தை இந்தியாவுடன் சேர்க்க நேரு ஆர்வம் காட்ட வில்லை. ஆனால், அசாம் மாநிலத்தை இந்தியாவின் அங்க மாக சேர்த்ததில் மகாத்மா காந்தி யும் கோபிநாத் பர்தோலோவும் (அசாம் முதல் முதல்வர்) முக்கிய பங்காற்றினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.