ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், விஜய் மல்லையா, இஷ்ரத் ஜஹான் விவகாரங்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், விஜய் மல்லையா, இஷ்ரத் ஜஹான் விவகாரங்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி
Updated on
1 min read

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், விஜய் மல்லையா, இஷ்ரத் ஜஹான் விவகாரங்களால் நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் நேற்று கடும் கூச்சல், குழப்பம், அமளி நிலவியது.

மக்களவையில் நேற்று இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் விவ காரத்தை காங்கிரஸ் எழுப்பியது. அந்த கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய போது, இஷ்ரத் ஜஹான் விவகாரத் தில் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக ஆளும் பாஜக பொய் கதையை புனைந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் பிரதாப் ரூடி மறுத்தார். அவர் பேசியபோது, என்கவுன்ட்டர் விவ காரத்தை நாடாளுமன்ற ஆலோ சனைக் குழு விசாரித்து வருகிறது. அந்த குழுவிடம் காங்கிரஸ் தனது கருத்தை பதிவு செய்யலாம் என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் அவையில் அமளி ஏற்பட்டது.

மாநிலங்களவையில் அமளி

மாநிலங்களவையில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் விவகாரத்தை எதிர்க் கட்சிகள் எழுப்பின. ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் பேசியபோது, பசுமைத் தீர்ப்பாயம் விதித்த அபராதத்தை செலுத்த முடியாது என்று ரவிசங்கர் மறுக்கிறார், அவர் சட்டத்தைவிட உயர்ந்தவரா, அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பேசியபோது, ரவிசங்கரின் மாநாட்டால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் இடதுசாரிகள், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக ஒருமித்து கோஷமிட்டனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தொழிலதிபர் விஜய் மல்லையா விவகாரத்தை அவையில் எழுப்பினார். அவர் பேசியபோது, கிரீன்பீஸ் அமைப்பை சேர்ந்த பிரியா பிள்ளை வெளி நாட்டுக்கு செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆனால் 17 வங்கிகளில் மோசடி செய்துள்ள விஜய் மல்லையா சுதந்திரமாக வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு உதவியின்றி அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்க முடியாது என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, மல்லையாவுக்கு அரசு எவ்வித சலுகையும் காட்டவில்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் குவாத்ரோச்சிக்கு சலுகைகள் வழங்கப்பட்டன என்று குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரங்களால் மாநிலங் களவையில் நேற்று கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in