ஆந்திராவில் கரையை கடந்தது ‘குலாப்’ புயல்

ஆந்திராவில் கரையை கடந்தது ‘குலாப்’ புயல்
Updated on
1 min read

வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல், வடக்கு ஆந்திரா பகுதியில் ஸ்ரீகாகுளம்- விஜயநகரம் இடையே நேற்றிரவு கரையைக் கடந்தது

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று முன்தினம் ‘குலாப்’ புயலாக வலுப்பெற்றது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, நேற்றிரவு 7 மணி அளவில் வடக்கு ஆந்திராவில் கரையைக் கடந்தது. அப்போது, கடலோர மாவட்டங்களில் மணிக்கு சுமார் 85 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால், முன்தாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்தது. புயல் பாதிப்பு விவரம் உடனடியாக தெரியவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை தொலைபேசியில் தொடர்புகொண்டு வடக்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து விசாரித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in