

காஷ்மீரில் நேற்று நடந்த என்கவுன்ட்டர் சம்பவத்தில் 2 தீவிர வாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் கடந்த ஆண்டு பாஜக நிர்வாகியை சுட்டுக் கொல்லப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸா ருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், அப்பகுதியில் நேற்று தீவிர சோதனையில் போலீஸார் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகள், போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உஷாரடைந்த போலீஸாரும் தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.
சுமார் அரை மணிநேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல் லப்பட்டனர். அவர்களில் ஒருவர், பண்டிபோராவைச் சேர்ந்த பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக் வாசிம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை கடந்த ஆண்டு கொலை செய்தவர் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.