Last Updated : 26 Sep, 2021 02:27 PM

 

Published : 26 Sep 2021 02:27 PM
Last Updated : 26 Sep 2021 02:27 PM

அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய காட்சி | கோப்புப்படம்

புதுடெல்லி

அனைத்து மக்களும் கரோனா தடுப்பூசி பாதுகாப்பு வட்டத்திலிருந்து வெளியேறவில்லை என்பதை உறுதி செய்து, அனைவரும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார்.

அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 81-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

நாட்டில் பண்டிகைக் காலம் நெருங்கி வருகிறது. ஸ்ரீராமர் துஷ்ட சக்தியை அழித்த மரியாதை புருஷோத்தமை கொண்டாடும் போது, கரோனாவுக்கு எதிராக நாம் போராடிக் வென்றதை நினைவில் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா பல்வேறு சாதனைகளை நாள்தோறும் நிகழ்த்தி வருகிறது, இந்தியா நிகழ்த்தும் பல்வேறு சாதனைகளை உலகமே பேசி வருகிறது. நம்முடைய முறைவரும்போதுதான் தடுப்பூசி செலுத்த வேண்டியது மட்டும் அவசியமில்லை, ஆனால் தடுப்பூசி பாதுகாப்பு வளையத்தைவிட்டு ஒருவரும் வெளியாறாமல் இருப்பதையும், அனைவரும் தடுப்பூசி செலுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும்.

தடுப்பூசி செலுத்தினாலும்கூட நாம் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகளைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். கரோனாவுக்கு எதிராக நாம் வென்றுவிட்டதாக நாம் வெற்றிக் கொடியை உயர்த்துவோம் என்ற நம்பிக்கையிருக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளுக்குமுன் தீனதயாள் உபாத்யாயே பிறந்தநாளில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்கினோம். உலகிலேயே மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தை தொடங்கினோம். 2.50 கோடி ஏழை மக்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன் பெற முடியும். தீனதயாளின் ஏழைகளுக்கான கொள்கைக்கு இந்த ஏழைகளுக்கான திட்டத்தை அர்ப்பணிக்கிறோம்.

மாற்றுத்திறனாளிகள் 8 பேர் சேர்ந்து மிகப்பெரியச் சாதனையைச் செய்துள்ளார்கள். 15ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனி மலையை இந்த 8 பேரும் ஏறி சாதனை படைத்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 8 பேரின் சாதனை தேசத்துக்கே ஊக்கமாக அமையும். சியாச்சின் மலையில் குளிர் எவ்வாறு இருக்கும், சாமானிய மக்கள் வாழ்வது எவ்வாறு கடினம் என்பது தெரியும். ஆனால், மாற்றுத்திறனாளிகள் 8 பேரும் சேர்ந்து சியாச்சின் மலையை அடைந்தது பாராட்டுக்குரியது. 15 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் சியாச்சின் பனிமலையில் தேசியக் கொடிையை ஏற்றி சாதனை படைத்துள்ளனர்.

மகேஷ் நெஹ்ரா,உத்தரகாண்டின் அக்சத் ராவத், மகாராஷ்டிராவின் புஷ்பக் கவான்டே, ஹரியானாவின் அஜெய் குமார், லடாக்கின் லாப்சங் சோஸ்பல், தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் துவார்கேஷ், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இர்பான் அகமது, இமாச்சலப் பிரதேசத்தேத்தைச் சேர்ந்த சாங்ஜின் இங்மோ ஆகியோர் சியாச்சின் மலைக்குச் சென்றனர். நம்முடைய மக்கள் ஒவ்வொரு சவாலையும் திறமையாக சமாளிக்க முடியும், சமாளிக்கும் தீர்மானம் இருக்கிறது, சாதிக்கும் மனநிலை இருக்கிறது என்பதை காட்டுகிறது.

ஒரு அழைப்புக்கு ஒரு ஆசிரியர் திட்டத்தை உத்தரப்பிரதேசம் சிறப்பாகச் செயல்படுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வியளித்து வருகிறது. இந்த முயற்சி நாட்டின் கல்வி எதிர்காலத்தை சரியாக வடிவமைக்கும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்வதற்காக கரோனா காலத்தில் 350 ஆசிரியர்களுக்கு மேல் இந்தப் பணியில் சேர்ந்தனர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள தபாஹுரா கங்காபூரில் உள்ள பள்ளியின் முதல்வர் தீப்மாலா பாண்டே இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.

ஒவ்வொரு கிராமம் கிராமமாக ஆசிரியர்கள் சென்று மாற்றுத்திறனாளிகள் மாணவர்களைச் சந்தித்து அவர்கள் பள்ளியில் சேர்வதை உறுதி செய்வார்கள். இந்த முயற்சிக்கு துணையாக இருந்த தீப்மாலா மற்றும் பிற ஆசிரியர்களைப் பாராட்டுகிறேன்

வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி வருகிறது. அந்த நாளில் மக்கள் அனைவரும் காதி பொருட்களையும், கதர் ஆடைகளையும் வாங்க வேண்டும். சுதந்திரம், சுத்தம் ஆகியவற்றை அடிப்படையாக மகாத்மாவின் கொள்கைகள் அமைந்துள்ளது. மக்கள் அனைவரும் உலக நதி நாளான இன்று அதைக் கொண்டாட வேண்டும். நதிகளுக்கென தனி நாளை நாம்கடைபிடித்து ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும். நதி நாள் இந்தியப் பாரம்பரியத்தோடு மிகவும் தொடர்புடையது

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x