Last Updated : 26 Sep, 2021 10:31 AM

 

Published : 26 Sep 2021 10:31 AM
Last Updated : 26 Sep 2021 10:31 AM

மே.வங்க தேர்தல்: பவானிபூர் தொகுதியில் வாக்காளராகப் பதிவு செய்த பிரசாந்த் கிஷோர்: பாஜக குற்றச்சாட்டு

தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் | கோப்புப்படம்

கொல்கத்தா

மே.வங்கத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இடைத் தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் வாக்காளராக தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தன்னைப் பதிவு செய்துள்ளார் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கு முன் பிஹார் மாநிலம், சசாரம் மாவட்டத்தில் உள்ள தான் பிறந்த கிராமத்தில்தான் தன்னை வாக்காளராகப் பிரசாந்த் கிஷோர் பதிவு செய்திருந்தார்.

ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் பணியாற்றியபோது,மே.வங்கத்தில் தன்னை வாக்காளராகப் பிரசாந்த் கிஷோர் பதிவு செய்தார். தன்னுடைய முகவரியிலும் காப்பாளராக மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜியின் பெயரை பதிவு செய்துள்ளார்.

கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று 213 இடங்களைக் கைப்பற்றியது, மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராகினார். ஆனால் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.

ஆனால், தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து. இருப்பினும் முதல்வராக மம்தா பானர்ஜி பதவி ஏற்றார். 6 மாதங்களுக்குள் எம்எம்ஏவாக பதவி ஏற்க வேண்டும் என்பதால், தான் முன்பு போட்டியிட்ட பவானிபூர் தொகுதி இடைத் தேர்தலில் மீண்டும் மம்தா போட்டியிடுகிறார். மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக மாநில வேளாண் அமைச்சர் சோபன்தீப் பவானிபூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

வரும் 30-ம் தேதி பவானிபூரில் இடைத் தேர்தலும், அக்டோபர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

இதற்கிடையே பிரசாந்த் கிஷோர் தன்னை வாக்காளராக பவானிபூரில் பதிவு செய்துள்ளது குறித்து பாஜக கருத்து தெரிவித்துள்ளது. பாஜக மே.வங்க ஊடகப்பிரிவு பொறுப்பாளர் சப்தரிஷி சவுத்ரி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பவானிபூர் வாக்காளராக பிரசாந்த் கிஷோர் வந்துவி்ட்டார். வங்காளத்தைச் சேர்ந்த பெண் வெளிநாட்டு வாக்கை விரும்புவாரா. இந்த மாநில மக்கள் இதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தேர்தல் ஆணையத்திலும் பிரசாந்த் கிஷோர் பவானிபூரில் வாக்காளராகப் பதிவு செய்திருப்பது தொடர்பாக பாஜக புகார் அளிக்க உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x