Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM

ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்க வழிகாட்டுதல்கள்: மத்திய பள்ளிக்கல்வித் துறை வெளியீடு

ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து மாணவர்களைப் பாதுகாப்பதற்கான வழி காட்டுதல்களை மத்திய பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சக செயலர் (பள்ளிக் கல்வி) அனிதா கார்வால், அனைத்து மாநில கல்வித் துறை செயலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

ஆன்லைன் விளையாட்டுகளில் பல் வேறு சவால்களும், விறுவிறுப்பான அம் சங்களும் நிறைந்துள்ளதால், குழந்தை களிடம் அதிக வரவேற்பு உள்ளது. அதன் விளைவாக மாணவர்கள் இதற்கு அடிமையாகும் அபாயமும் நிலவுகிறது.

கரோனா பரவல் தொடங்கியது முதல் பெரும்பாலும் வீட்டிலேயே முடங்கியுள்ள தால், கடந்த 2 ஆண்டுகளில் குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளில் காட்டும் ஈடுபாடு பலமடங்கு உயர்ந்துள்ளது.

ஆனால், இந்த ஆன்லைன் விளை யாட்டுகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவருகின்றன.

இந்த விளையாட்டுகளில் குழந்தை கள் தொடர்ந்து பங்கேற்பதால், அதற்கு முழுவதும் அடிமையாகி, மன உளைச் சலில் தவிக்கின்றனர். விளையாட்டின் ஒவ்வொரு கட்டமும் அதிக சவால் நிறைந்ததாக இருப்பதால், குழந்தை களுக்கு தேவை இல்லாத அழுத்தம் ஏற்பட்டு ‘கேமிங் டிஸ்ஆர்டர்’ ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதைக் கருத்தில் கொண்டு, ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து மாணவர்களைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்கள் தரப்பட்டுள்ளன. ஆசி ரியர்கள் மற்றும் பெற்றோர் இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றி செயல்பட வேண்டும்.

அதன்படி, பெற்றோர் அனுமதி யின்றி எந்த விளையாட்டையும் வாங்கு வதற்கு குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) வழிகாட்டுதல்படி, ஓடிபி அடிப்படை யிலான கட்டண முறையில் மட்டுமே பணம் செலுத்தவேண்டும்.

அதேபோல, முறையற்ற வலைதளங் களில் இருந்து எவ்வித இணைப்பையும் பதிவிறக்கம் செய்யவோ, தங்களது சொந்த விவரங்களைப் பகிரவோ வேண் டாம் என்று குழந்தைகளை எச்சரிக்க வேண்டும்.

தங்களது டெபிட் கார்டுகளை குழந்தை கள் பயன்படுத்த பெற்றோர் அனுமதிக்கக் கூடாது. மேலும், இணைய செயலிகள் மூலம் அறிமுகமாகும் நபரிடம், எவ்வித தகவல் பரிமாற்றமும் செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்த வேண்டும்.

இதுதவிர, இணையதளத்தில் ஏதே னும் விபரிதமாக நிகழ்ந்துவிட்டால், அது தொடர்பாக உடனடியாக புகார் அளிக்க வேண்டும். மாணவர்கள் எந்த செயலிகளை அதிகம் பயன்படுத்து கிறார்கள், விளையாட்டுகளின் வயது வரம்பு, ஆபாச தளங்களைப் பார்வை யிடுகிறார்களா என்பன உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க வேண்டும். அதில் தவறுகள் இருப்பதைக் கண்டறிந்தால், தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

ஆன்லைன் விளையாட்டுகள் ஒரு பொழுதுபோக்கு என்பதை புரியவைத்து, படிப்பில் கவனம் செலுத்துமாறு மாண வர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

திடீரென படிப்பில் கவனம் குறைந் தாலோ, பழகும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படுமாறு, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை

நடவடிக்கை எடுக்க அமைச்சர் உறுதி

ஆன்லைன் விளையாட்டுகளில் பாதிப்புகள் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கேட்டபோது, "ஏற்கெனவே ஆன்லைன் ரம்மி உட்பட இணையதள விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தற்போதைய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x