

அசாமில் அரசு மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு சொந்த மான நிலம், பெரும் பாலும் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய வங்காள மொழி பேசும் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது அசாமின் பூர்வீக மக்களின் அடை யாளத்துக்கு அச்சுறுத்தலாக பார்க் கப்படுகிறது.
அசாமின் டேரங் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை சுமார் 7,000 பிகா (சுமார் 9 சதுர கி.மீ.) அரசு நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து போலீஸார் விடுவிக்க முயன்றபோது, மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். முன்னதாக கடந்த திங்கட்கிழமை அதன் அருகில் சுமார் 4,000 பிகா நிலத்தை, அசம்பாவிதம் ஏதுமின்றி போலீஸார் மீட்டனர்.
அசாமில் 49 லட்சத்துக்கும் மேற்பட்ட பிகா (6,652 சதுர கி.மீ) நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கடந்த 2017-ல் அப்போதைய வருவாய்த் துறை இணை அமைச்சர் வல்லப லோச்சன் தாஸ் சட்டப்பேரவையில் கூறினார்.
இது, கோவா மாநிலத்தை போல 2 மடங்கு நிலம் ஆகும். மேலும் சிக்கிம் மாநிலத்தை விட சற்று குறைந்த அளவாகும். ஆக்கிரமிப்பில் உள்ள மொத்த நிலத்தில் 3,172 சதுர கி.மீ. வன நிலமாகும். வைணவ சத்திரங்கள் மற்றும் பழங்கால கோயில்களுக்கு சொந்தமான நிலப்பரப்புகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
அசாமின் முந்தைய பாஜக அரசு காசிரங்கா தேசிய பூங்கா பகுதி யிலிருந்து ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதுபோல் அசாமின் கலாச்சாரம் மற்றும் மத வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த மந்த சங்கர்தேவா பிறந்த இடமான படத்ரபா தானுக்கு சொந்தமான நிலத்தில் இருந்தும் ஆக்கிரமிப்பாளர்கள் வெளி யேற்றப்பட்டனர்.
அசாம் மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்களின் நில உரிமை களை உறுதி செய்வதற்காக, சட்டங்கள் மற்றும் கொள்கைகளில் மாற்றங்கள் செய்ய, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்தது.
அக்குழுவினர் களப்பணிகளில்ஈடுபட்ட பின்னர் அளித்த அறிக்கையில், “ஆயிரக்கணக்கான சட்டவிரோத வங்கதேசத்தினரால் அசாமில் நாளுக்கு நாள் புதியபகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆறுகளால் சூழப்பட்டுள்ள காலித் தீவுகளில் கட்டுமானப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் இரவோடு இரவாக குடியேறும் வங்கதேசத்தை சேர்ந்த நில அபகரிப்பாளர்கள் சட்டவிரோத கிராமங்களை ஏற்படுத்தி யுள்ளனர். இதை பழங்குயின மக்கள் எதிர்க்க முயன்றால் தாக்குதல் களை எதிர்கொள்கின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.