2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் வெளிநாடு செல்லும்போது சான்றிதழில் பிறந்த தேதி சேர்ப்பு: மத்திய அரசு தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி்யவர்கள், வெளிநாடு செல்ல விரும்பும்போது,அவர்களின் கோவின் சான்றிதழில் பிறந்ததேதியும் பதிவு செய்யப்படும் என்றுமத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியா, பிரிட்டன் இடையே கரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்பது குறித்த பேச்சு நடந்து வரும் நிலையில் இது தொடர்பாக மத்திய அரசுஆலோசித்துள்ளது.

தற்போது கோவின் சான்றிதழில் தடுப்பூசி செலுத்தியவரின் மற்றவிவரங்கள் அடிப்படையில் பிறந்த தேதி குறிப்பிடப்படுகிறது. ஆனால், மத்திய அரசு புதிதாக உலக சுகாதார அமைப்பின் வழிமுறையின்படி புதிய வசதியை ஏற்படுத்த உள்ளது. இது அடுத்தவாரத்தில் இருந்து நடைமுறைக்கு வரக்கூடும்.

இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ கோவின் தளத்தில் புதிய வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் வெளிநாடு செல்ல விரும்பினால், அவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழில் முழுமையான பிறந்த தேதி குறிப்பிடப்படும்” எனத் தெரிவி்க்கின்றன.

கடந்த 22ம் தேதி பிரிட்டன் அரசு புதிய பயணவழிகாட்டுதுலை வெளியிட்டது. அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜென்கா தடுப்பூசியின் கோவிஷீல்ட் தடுப்பூசியை அங்கீகரிக்காதமைக்கு இந்தியா சார்பில் கடும்கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் கோவிஷீல்ட் உள்ளிட்ட எந்தத் தடுப்பூசியையும் முழுைமயாகச் செலுத்திய பயணிகள் பிரிட்டன் சென்றால், 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என விதிகள் மாற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in