

கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை யில் உள்ளது. இதுதொடர்பான வழக்கு கடந்த ஜூன் 30-ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி கூறும் போது, கரோனாவால் உயிரிழந் தோர் குடும்பத்துக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பான நெறி முறைகளை 6 வாரங்களுக்குள் வெளியிடும்படி, தேசிய பேரிடர் நிர்வாக ஆணையத்துக்கு உத்தர விட்டிருந்தார்.
இந்த வழக்கில் கடந்த புதன் கிழமை மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் கூறும்போது, கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க, தேசிய பேரிடர் நிர்வாக ஆணையத்துக்கு மத்திய அரசு பரிந்துரைத்து உள்ளது.
இந்த இழப்பீட்டை, மாநில பேரிடர் நிர்வாக நிதியில் இருந்து மாநிலங்கள் வழங்கும்.மேலும், கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கரோனா பாதிப்பு ஏற்பட்டு 30 நாட்களுக்குள் ஏற்படும் உயிரிழப்புகள் மட்டுமே கரோனா மரணமாக கருதப்படும். 30 நாட்களுக்கு மேல் கரோனாவுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது உயிரிழந்த வர்கள் நிபந்தனைகள் அடிப் படையில் "கரோனா மரணம்" பட்டியலில் சேர்க்கப்படுவர். ஆனால் கரோனா பாதிப்பு ஏற்பட்டு விபத்து மற்றும் தற்கொலை செய்து இறப்பவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முடியாது என மத்திய அரசு கூறியிருந்தது.
ஆனால் கரோனாவால் ஏற்படும் மன உளைச்சல்தான் நோயா ளிகளை தற்கொலைக்கு தூண்டு வதாக தெரிவித்த நீதிபதிகள், அதற்கும் இழப்பீடு வழங்குவது குறித்து மறு பரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதனிடையே மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் பிரமாணப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக மாநில பேரிடர் நிதியிலிருந்து வழங்கப்படும். கரோனா பாதிப்பு ஏற்பட்டு 30 நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பத்துக்கும் இந்த நிவாரணம் வழங்கப்படும்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் 30 நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்டிருந் தால் அது கரோனா உயிரிழப்பாக கணக்கிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கை நீதிபதிகள் எம்.ஆர். ஷா, ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. - பிடிஐ