குஜராத் சட்டப்பேரவைக்கு முதல் பெண் சபாநாயகராக நிமாபென் ஆச்சார்யா தேர்வாகிறார்

குஜராத் சட்டப்பேரவைக்கு முதல் பெண் சபாநாயகராக நிமாபென் ஆச்சார்யா தேர்வாகிறார்
Updated on
1 min read

குஜராத் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்து வந்த ராஜேந்திர திரிவேதி, மாநில பாஜக அரசின் புதிய அமைச்சரவையில் அமைச்சராக பதவி ஏற்றார். இந்நிலையில், குஜராத் சட்டப்பேவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 27-ம் தேதி கூடுகிறது. காலியாக உள்ள சபாநாயகர் பதவிக்கு பெண் எம்எல்ஏ நிமாபென் ஆச்சார்யா பெயரை பாஜக அறிவித்தது.

சபாநாயகர் பதவிக்கு நிமாபென் ஆச்சார்யா சார்பிலும், துணை சபாநாயகர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ ஜேதா பர்வத் சார்பிலும் சட்டப்பேரவை செயலாளரிடம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸும் சபாநாயகர் பதவிக்கு நிமாபென்னை ஆதரித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பரேஷ் தனானியும் நிமாபென்னுக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, முதல் பெண் சபாநாயகராக நிமாபென் ஆச்சார்யா தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. அதேநேரம், துணை சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி தனது எம்எல்ஏ அனில் ஜோஷியாராவை நிறுத்தி உள்ளது. இதனால், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in