

பெங்களூருவில் விசாரணைக் கைதியை போலீஸார் அடித்துக் கொன்றதாக எழுந்த குற்றச்சாட் டைத் தொடர்ந்து 6 போலீஸார் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் உள்ள ஹெச்ஏஎல் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் புரோஹித். இவரது வீட்டில் ஒடிசாவைச் சேர்ந்த மகேந்திர் (42) கடந்த 12 ஆண்டு களாக பணியாற்றி வந்தார்.
கடந்த சனிக்கிழமை புரோகித் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டுப் போனது. இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்த ஜீவன் பீமா நகர் காவல் நிலைய போலீஸார், சந்தேகத் தின் பேரில் மகேந்திரை காவல் நிலையத்துக்கு சென்றனர்.
அங்கு விசாரணையின்போது மயங்கி விழுந்த மகேந்திரை போலீ ஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மகேந்திர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மகேந்திரை உணவு கொடுக்காமல் அடித்து துன்புறுத்தியதாக போலீஸார் மீது அவரின் மனைவியும் மகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மனித உரிமை செயல்பாட் டாளர்கள், மகேந்திரின் உடலில் காயங்கள் இருப்பதால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்விவகாரத்தை தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த கர்நாடக மனித உரிமை ஆணையம், பெங்களூரு மாநகர காவல் ஆணையரிடம் விளக்கம் கோரியுள்ளது.
மகேந்திர் மரணம் தொடர்பான வழக்கை கர்நாடக சிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர்.
இதனிடையே, மகேந்திர் மரணம் தொடர்பாக ஜீவன் பீமா நகர் காவல் ஆய்வாளர் ஹிதேந்திரா, துணை காவல் ஆய்வாளர் ராஜசேகர் உட்பட 6 போலீஸார் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.