100% முதல் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திய 6 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்

மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண்
மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண்
Updated on
1 min read

ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் மக்கள்தொகையில் 100 சதவீத அளவுக்கு முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறினார்.

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை இன்று 83 கோடியைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 71,38,205 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:

ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் மக்கள்தொகையில் 100 சதவீத அளவுக்கு முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளன. இவை லட்சத்தீவு, சண்டிகர், கோவா, இமாச்சல பிரதேசம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் சிக்கிம் ஆகியவை ஆகும்.

18 வயதுக்கு மேற்பட்டோரில் 66% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டோரில் 23% இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். சில மாநிலங்களில் மேற்கொண்ட மகத்தான பணிகளால் கரோனா தடுப்பூசி செலுத்தும் சாதனையை நம்மால் அடைய முடிந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று பாதிப்பு 31,000 என்ற எண்ணிக்கையில் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து பதிவாகியுள்ளன. கடந்த வாரத்தில் மொத்த பாதிப்புகளில் 62.73% கேரளாவிலிருந்து பதிவாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக பாதிப்பு குறைந்து வருகிறது.

தொடர்ந்து 12 வது வாரமாக, வாராந்திர நேர்மறை விகிதம் தொடர்ந்து குறைந்து 3% க்கும் குறைவாக உள்ளது. நாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.8% ஆக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in