

தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த 2 காவலர்கள் உட்பட 6 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் அரசு ஊழி யர்களுக்கு தீவிரவாத அமைப்பு களுடன் தொடர்பு இருப்பது குறித்த வழக்குகளை ஆராயவும் அரசுக்கு பரிந்துரை அளிக்கவும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 311(2)(சி)-ன் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீவிரவாதி களுடன் தொடர்பு வைத்திருந்த 6 ஊழியர்களை அரசு பணியில் இருந்து நீக்க வேண்டும் என இந்தக் குழு பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில் 2 போலீஸ் காவலர்கள் உள்ளிட்ட 6 ஊழியர்களை அரசு பணிநீக்கம் செய்துள்ளது.
காஷ்மீர் அரசு ஊழியர்களுக்கு அந்தந்த துறைகளின் கண் காணிப்பு பிரிவு ஒப்புதல் இல்லாமல் பாஸ்போர்ட் வழங்கக் கூடாது என யூனியன் பிரதேச அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது.
தீவிரவாதிகளுடன் தொடர்பு காரணமாக ஜம்மு காஷ்மீர் அரசு கடந்த ஜூலை மாதம் தனது 11 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இவர்களில் ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையது சலாஹுதீன் மகன்கள் மற்றும் காவல் துறையை சேர்ந்த இருவரும் அடங்குவர். தீவிரவாத அமைப்புகளுக்காக பணியாற்றியதற்காக இவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக அப்போது அதிகாரிகள் தெரிவித்தனர்.-பிடிஐ