

எல்லையில் நமது பாதுகாப்பை மத்திய அரசு புறக்கணிப்பது சரியல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
லடாக், உத்தராகண்ட், அருணாச்சல பிரதேசம் ஆகிய இடங்களில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனா புதிதாக 10 விமானப் படை தளங்களை அமைத்து வருவதாகவும் இந்திய பகுதிகளுக்கு அருகே சீனா தனது உள்கட்டமைப்பை அதிகரித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. இந்த செய்திகளை ட்விட்டரில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்தியா அதன் எல்லைப் பகுதிகளில் ஒரு புதிய போர் முன்மாதிரியை சந்தித்து வருகிறது. எல்லையில் நமது பாதுகாப்பை மத்திய அரசு புறக்கணிக்கிறது. அவ்வாறு புறக்கணிப்பது சரியானது அல்ல, அது எந்தப் பலனையும் தராது’’ என்று கூறியுள்ளார்.