‘பிருத்வி 2’ ஏவுகணை சோதனை வெற்றி

‘பிருத்வி 2’ ஏவுகணை சோதனை வெற்றி
Updated on
1 min read

இந்தியாவின் அதிநவீன ‘பிருத்வி 2’ ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

ஒடிஷா மாநிலம் சந்திப்பூர் கடலோர பகுதியில் நேற்று காலை 10 மணி அளவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்தியாவின் ஒருங்கிணைந்த ஏவுகணை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் முதல்முறையாக உருவாக்கியுள்ள ‘பிருத்வி 2’ ஏவுகணை நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் படைத்தது. அத்துடன் 500 முதல் 1,000 கிலோ எடை கொண்ட போர் தளவாடங் களை சுமந்து சென்று, 350 கி.மீ தொலைவில் உள்ள இலக்கு களை தாக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. கடைசி யாக கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்த ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in