

எம்.பி.க்கள் ஊதியத்தை இருமடங்காக உயர்த்தும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டுக் குழு மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளது.
மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் தற்போது ரூ.50 ஆயிரம் ஊதியம், ரூ.45 ஆயிரம் தொகுதிப் படி, ரூ.45 ஆயிரம் அலுவலகப் படி என மாதந்தோறும் ரூ.1.40 லட்சம் சம்பளம் பெறுகின்றனர்.
இந்நிலையில் ஊதியம், படியை இருமடங் காக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ரூ.1 லட்சம் ஊதியம், தொகுதிப் படி ரூ. 90 ஆயிரம், அலுவலகப் படி ரூ.90 ஆயிரம் என மாதம் ரூ.2.8 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாஜக எம்.பி. யோகி ஆதிய நாத் தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வு செய்தது. இந்த குழு தனது பரிந்துரை களை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
அதில் எம்.பி.க்கள் ஊதியத்தை இருமடங் காக உயர்த்தும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய் யப்பட்டுள்ளது.