Published : 21 Sep 2021 03:18 AM
Last Updated : 21 Sep 2021 03:18 AM

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு 81 உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு 81 பேரை நியமனம் செய்துள்ளது. அறங்காவலர் குழுதலைவராக முதல்வரின் சித்தப்பாவான ஒய்.வி. சுப்பாரெட்டி 2-வதுமுறையாக தொடர்ந்து இப்பதவியை வகித்து வருகிறார்.

மேலும் அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமனம் செய்வது தொடர்பாக மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் தரப்பில் மாநில அரசுக்கு ஏராளமான பரிந்துரைகள் குவிந்தன. இதன்காரணமாக அரசுக்கு பெரும் நெருக்கடி உருவானதாக கூறப்படுகிறது.

அறங்காவலர்களுக்கு திருமலையில் அலுவலகம், தங்கும் விடுதி, உதவியாளர் என அனைத்து வசதிகளையும் தேவஸ்தானம் செய்து கொடுக்கிறது. தற்போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிஅரசு, அறங்காவலர் குழுவில் 81 பேரை நியமனம் செய்துள்ளது. இதன்படி அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் என 25பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் என 51 பேரும், அதிகாரிகள் 5 பேரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கு முன்பு 15 பேரில் இருந்து 20 பேர் வரை மட்டுமே அறங்காவலர் குழுவில் இடம்பெற்றிருந்தனர். கடந்த முறை 34 பேர் பதவி வகித்தனர். தற்போது எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பணத்தை அறங்காவலர் களுக்காக அதிகம் செலவு செய்யவேண்டியுள்ளது. இது வீண்செலவு, இந்த பெரிய அறங்காவலர் குழுவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உமா மகேஷ்வர ராவ் என்பவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.

முந்திரியில் முறைகேடு

பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் முக்தா நிறுவனம்திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு முந்திரிகளை விநியோகம் செய்து வருகிறது. ஒப்பந்தபுள்ளியில் குறிப்பிட்ட தரத்தைவிட, தரம் குறைந்த முந்திரியை அந்தநிறுவனம் விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இதுகுறித்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x