ஜே.என்.யூ. மைய நூலக இணையதளம் ஹேக் செய்யப்பட்டது?

ஜே.என்.யூ. மைய நூலக இணையதளம் ஹேக் செய்யப்பட்டது?
Updated on
1 min read

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மைய நூலகத்தின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

‘பிளாக் டிராகன்’ என்ற ஹேக்கர் கும்பல் இந்த வேலையைச் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கூகுள் தேடல் எந்திரத்தில் ஜே.என்.யூ. செண்ட்ரல் யுனிவர்சிட்டி என்ற திறவுச்சொற்களின் மூலம் தேடினால் “Hacked By Bl@Ck Dr@Gon என்ற வாசகம் தோன்றுவதோடு "ஜே.என்.யூ. வளாகத்தில் குரைப்பதன் மூலம் காஷ்மீர் கிடைத்து விடும் என்ற நினைக்கிறீர்களா?" என்று இந்தியில் சில வாசகங்களும் வருகின்றன.

ஆனால், இந்தச் செய்தியை வெளியிடும் இத்தருணத்தில் இணையதளத்தை திறந்தால் "Service Temporarily Unavailable” என்ற வாசகம் வருகிறது.

இந்தியாவுக்கு ஆதரவான சைபர் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக இந்த ஹேக்கர் கும்பலான பிளாக் டிராகன ்கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in