ஆட்டோ ஓட்டுநர்கள் மூலம் பெங்களூருவில் காலூன்ற ஆம் ஆத்மி முயற்சி

ஆட்டோ ஓட்டுநர்கள் மூலம் பெங்களூருவில் காலூன்ற ஆம் ஆத்மி முயற்சி
Updated on
1 min read

குறுகிய காலத்தில் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, தனது வழக்கமான பாணியை விடுத்து, ஆட்டோ ஓட்டு நர்களின் மூலம் பெங்களூருவில் காலூன்ற வியூகம் வகுத்துள்ளது.

பெங்களூருவில் ஐடி ஊழியர் கள், மேல்தட்டு வர்க்கத்தினர் மற்றும் படித்தவர்களிடம் மட்டுமே அங்கீகாரம் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியை சாதாரண மக்களிட மும் கொண்டு செல்ல கேஜ்ரிவால் முடிவெடுத்துள்ளார்.

அதன்படி நேற்று முன்தினம் பெங்களூருவில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் பொதுக்கூட்டத் துக்கு ஆட்டோவில் வந்த கேஜ்ரி வால் பேசியதாவது:

நாட்டில் பிரதமர் ஆவதற்கோ, முதல்வர் ஆவதற்கோ அரசிய லமைப்பு சட்டத்தில் கல்வித் தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இப்போதைய நாடாளுமன்றத்தில் 10-ம் வகுப்புக்கும் குறைவாக படித் தவர்கள் 13 பேர் இருக்கிறார்கள்.

ஆனால், ஆட்டோ, டாக்ஸி, பேருந்து, லாரி உள்ளிட்ட மஞ்சள் நிற எண் பலகை கொண்ட வாகனங் களை ஓட்டுவதற்கு குறைந்தப் பட்சம் 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்று ஒரு மோசமான சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றி இருக்கிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக்கூடாது என மத்திய மோட்டார் வாகன சட்டப்பிரிவு 8-ல் திருத்தம் செய்துள்ளனர்.

எல்லா ஓட்டுநர்களுக்கும் எளிதில் புரியும் வகையிலே சாலை விதிகள் இருக்கிறது. இதற்கு கல்வி தகுதி தேவையில்லை. ஆட்டோ ஓட்டுநர்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய மாநில அரசுகள், இந்த கொடூர சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆட்டோ ஓட்டுநர்களை மையப் படுத்தி பேசிய கேஜ்ரிவாலின் பேச்சுக்கு நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது. இதனால் பல ஆட்டோக் களின் பின்னால், “உங்களுக்கு (அரசியல்வாதிகளுக்கு) கல்வி தகுதி ஓ.கே., எங்களுக்கு (ஆட்டோ ஓட்டுநர்களுக்கு) கல்வி தகுதி எதற்கு?” என்ற வாசகங்களுடன் கேலி சித்திரம் ஒட்டப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in