வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆதார் கேஒய்சி உரிமம் பெறுவதால் நிதி மோசடி குறையும்: துறைசார் வல்லுநர்கள் கருத்து

வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆதார் கேஒய்சி உரிமம் பெறுவதால் நிதி மோசடி குறையும்: துறைசார் வல்லுநர்கள் கருத்து
Updated on
1 min read

வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி), பணப்பரிவர்த்தனை சேவை நிறுவனங்கள் தற்போதுஆதார் இ-கேஓய்சி உரிமம் பெறலாம் என்ற அறிவிப்பால் நிதிமோசடி குறையும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கிசாரா நிதி அமைப்புகள், பணப்பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனங்கள் வாடிக் கையாளர்கள் தொடர்பான விவரங்களைப் பெறுவதற்கு அவர்களது ஆதார் அட்டை நகலைப் பெற்று வருகின்றன.

இத்தகைய ஆஃப்லைன் ஆவணங்களில் விவரங்களைச் சரிபார்ப்பதும், அவற்றை பதிவேற்றுவதும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது. இதனால் பல குளறுபடிகளும் நிகழ்கின்றன. இந்நிலையில் இனி என்பிஎப்சி, பணப்பரிவத்தனை சேவை நிறுவனங்கள் ஆதார் கேஒய்சி உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்றுரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. ஆதார் கேஒய்சி உரிமம் பெற்ற நிதி அமைப்புகள் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணை உள்ளிட்டு அவர்கள் தொடர்பான விவரங்களைச் சரிபார்க்கலாம்.

இது குறித்து டைட் நிறுவனத்தின் சிஇஓ குர்ஜோத்பால் சிங் கூறுகையில், ‘ஆர்பிஐயின் இந்த முடிவு டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கும். நிதி மோசடி நடைபெறுவதைத் தடுக்கும்' என்றார். - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in