

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை குறித்து அவதூறாக பேசியதாக கூறி சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமாஜ்வாதி கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தலைவரும், எம்எல்சியுமான ராஜ்பால் காஷ்யப், கடந்த வாரம் பிலிபிட் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை குறித்து அவதூறான கருத்துகளை கூறினார்.
அதேபோல, சமாஜ்வாதி கட்சியின் பிலிபிட் மாவட்ட தலைவரான யூசுப் காத்ரி என்பவரும் முதல்வரின் தந்தையை தரக்குறைவாக விமர்சித்திருந்தார்.
இதுதொடர்பாக பாஜக நிர்வாகி மகாதேவ் அளித்த புகாரின் பேரில், அவர்கள் மீது பிலிபிட் போலீஸார் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர்.