

பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்கள் ஆகியவற்றை அவரது பிறந்த நாளான நேற்று முன்தினம் மின்னணு ஏலத்தில் விடும் பணியை கலாச்சாரத் துறை அமைச்சகம் தொடங்கியது.
இந்த ஏலத்தில் டோக்கியா ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்கள், பிரதமருக்கு வழங்கிய நினைவுப் பரிசுகளும் இடம் பெற்றிருந்தன. முதல் நாளிலேயே ரூ.10 கோடிக்குமேல் பொருட்கள் ஏலம் கேட்கப் பட்டிருந்தன.
குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம்வென்ற ஆட்டத்தில் பயன்படுத்திய கையுறை அதிகபட்சமாக ரூ.1.92கோடிக்கு 11 பேர் ஏலம் கேட்டிருந்தனர். இதன் அடிப்படை விலைரூ.80 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்தபடியாக நீரஜ்சோப்ரா பயன்படுத்திய ஈட்டி ரூ.1.55 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டிருந்தது. பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற சுமித் அன்டில் பயன்படுத்திய ஈட்டி ரூ.1.8 கோடிக்கும், மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் பயன்படுத்திய ஹாக்கி மட்டை ரூ.1.1 கோடிக்கும் ஏலம் கேட்கப்பட்டது. இந்த மின்னணு ஏலம் மூலம் கிடைக்கும் பணம், கங்கை நதியை பாதுகாக்கும் மற்றும் புதுப்பிக்கும் ‘நமாமி கங்கை’ திட்டத்துக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் டோக்கியா ஒலிம்பிக், பாராலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்கள், பிரதமருக்கு வழங்கிய நினைவுப் பரிசுகளும் இடம் பெற்றிருந்தன. முதல் நாளிலேயே ரூ.10 கோடிக்கு மேல் பொருட்கள் ஏலம் கேட்கப்பட்டன.