Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

அடுத்தடுத்து குளறுபடி நடப்பதால் அதிர்ச்சி; பிஹார் மாநிலத்தில் மேலும் ஒருவரின் வங்கிக் கணக்கில் ரூ.52 கோடி திடீர் வரவு: சிறிய தொகையை கேட்கிறார் வாடிக்கையாளர்

பிஹாரில் மேலும் ஒருவரின் வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் அனுப்பபட்டுள்ளது குறித்துவங்கி அதிகாரிகளும், போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிஹாரில் அண்மைக்காலமாக சிலரது வங்கிக்கணக்குகளில் தவறுதலாக கோடிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருவதுபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அம்மாநிலத்தின் கடிஹார்மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டுபள்ளி மாணவர்களின் வங்கிக்கணக்குகளில் ரூ.962 கோடி செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பிஹாரின் முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தராம் பகதூர் ஷா என்பவர் தனதுஓய்வூதியம் குறித்து சில விவரங்களை கேட்பதற்காக அருகில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள், அவரது வங்கிக் கணக்கை சோதனை செய்தபோது அதில்ரூ.52 கோடி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ராம் பகதூரிடம் கேட்ட போது, அவருக்கும் இதுகுறித்த விவரம் தெரியவில்லை.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயி ராம் பகதூர் கூறும்போது, “எனது வங்கிக் கணக்கில் 3 ஆயிரம் ரூபாயை விட அதிகமாக நான் பார்த்ததில்லை. தற்போது ரூ.52 கோடி இருப்பதாக கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது தவறுதலாக செலுத்தப்பட்ட பணம். எனினும், எனது வறுமை நிலையை கருத்தில்கொண்டு இந்த தொகையில் மிகச்சிறிய பங்கை மட்டும் அரசு எனக்கு தந்தால் மகிழ்ச்சி அடைவேன்” என்றார்.

முன்னதாக, பிகாரைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கில் கடந்த ஆண்டு ரூ.5.58 லட்சம் தவறுதலாக செலுத்தப்பட்டிருந்தது. இதனை அறிந்த வங்கி நிர்வாகம் அவரிடம் கேட்ட போது, மத்திய அரசு தனது கணக்கில் பணம் போட்டிருப்பதாக நினைத்து அதனை செலவழித்து விட்டதாக கூறினார். பின்னர், அந்த நபரை போலீஸார் அண்மையில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x