

நாட்டிலேயே மிகப் பெரிய மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை பொதுத் துறை நிறுவனமான தேசிய அனல் மின் கழகம் நிறுவியுள்ளது. இது 25 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையின் செயல்பாடு 2 நாட்களுக்கு முன்னர் தொடங்கி வைக்கப்பட்டது.
பொதுத்துறை நிறுவமான பாரத மிகு மின் நிறுவனம் (பிஹெச்இஎல்) இதை நிறுவியுள்ளது. ஆந்திர மாநிலம் சிம்ஹாத்ரி அணைக்கட்டு பகுதியில் நிறுவப்பட்டுள்ள இந்த மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி பேனல்களால் தண்ணீர் ஆவியாவதும் தடுக்கப்படும். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்னுற்பத்தியும் செய் யப்படும்.
அணையில் உள்ள சுவர்களில் மோதாத வகையிலும், நீர் குறையும் போது தரை தட்டாத வகையிலும் இந்த மிதக்கும் நிலையத்தை பிஹெச்இஎல் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
கடலோர பகுதியில் உள்ளதால் அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் காற்று வீசினாலும் தாக்குப் பிடிக்கும் திறன் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல துருப்பிடிக்காத தன்மைகொண்டதாகவும் இது உருவாக் கப்பட்டுள்ளது. பிஹெச்இஎல் நிறுவனம் இது வரை 45 மெகாவாட்டுக்கு மேற் பட்ட திறன் கொண்ட சிறப்பு திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது. 107 மெகாவாட் உற்பத்திக்கான மின்னுற்பத்தி பணி களை தற்போது இந்நிறுவனம் மேற்கொண் டுள்ளது.
சூரிய மின்னுற்பத்தி திட்டப்பணிகளை உருவாக்கி செயல்படுத்துவதில் பிஹெச்இஎல் நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கிறது. 1.2 கிகாவாட் திறன் கொண்ட திட்டப் பணிகளை இந்நிறுவனம் செயல் படுத்தியுள்ளது. நிலத்தில் நிறுவுவது, மேற்கூரையில் நிறுவுவது மற்றும் மிதக்கும் வடிவம் மற்றும் கால்வாய் மேல்பரப்பு உள்ளிட்டவற்றில் சூரிய மின்னுற்பத்தி தகடுகளை வடிவமைத்து நிறுவித் தருவதில் இந்நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கிறது. இது தவிர விண் வெளித்துறைக்குத் தேவையான சூரிய மின்னுற்பத்தி பேனல் மற்றும் பேட்டரிகளையும் இந்நிறுவனம் தயாரித்துத் தருவது குறிப்பிடத்தக்கது.