மும்பை - நாக்பூர் விரைவு சாலையில் நாட்டிலேயே மிக அகலமான இரட்டை சுரங்க பாதை

மும்பை - நாக்பூர் விரைவு சாலையில் நாட்டிலேயே மிக அகலமான இரட்டை சுரங்க பாதை
Updated on
1 min read

மகாராஷ்டிராவில் மும்பை - நாக்பூர் விரைவு சாலையில் நாட்டின் அகலமான சுரங்கத்தை 2 ஆண்டுகளில் அமைத்து பொறியாளர்கள் சாதனை செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் நாசிக் நெடுஞ்சாலையில் கசரா காட் என்ற இடத்தில் 8 கிலோ மீட்டர் நீளமும் தலா 17.5 மீட்டர் அகலமும் கொண்ட இரட்டை சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 2,475 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கம் நாட்டிலேயே மிகவும் அகலமான சுரங்கம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. மேலும், நாட்டின் நீளமான 4-வது சுரங்கமான இதை 2 ஆண்டுகளில் பொறியாளர்கள் அமைத்துள்ளனர். மலைப் பகுதியை குடைந்து இந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

மும்பை - நாக்பூர் இடையேதேசிய விரைவு நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக கசரா காட்டில்இந்தச் சுரங்கம் அமைக்கப்பட் டுள்ளது. 700 கி.மீ. நீளமுள்ள தேசிய விரைவு நெடுஞ்சாலை மூலம் மும்பையில் இருந்து நாக்பூர் செல்வதற்கு 14 முதல் 15 மணி நேரம் ஆகும்.

இப்போது கசரா காட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதை வழியே 8 முதல் 9 மணி நேரத்திலேயே மும்பையில் இருந்து நாக்பூர் சென்றுவிட முடியும்.

இந்தியாவின் மிக அகலமான சுரங்கப்பாதையை 2 ஆண்டுகளில் பொறியாளர்கள் அமைத்தது பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. ‘‘8 கி.மீ. நீளத்தில் 17.5 மீ்ட்டர் அகலமான சுரங்கத்தை 2 ஆண்டுகளில் அமைத்ததாக வரலாறு இல்லை. பொறியாளர்களும் தொழிலாளர்களும் திறமையாகவும் வேகமாகவும் பணியாற்றி குறித்த காலத்துக்கு முன்பே 2 ஆண்டுகளில் சுரங்கத்தை அமைத்துள்ளனர்’’ என்று மகாராஷ்டிரா சாலை மேம் பாட்டுக் கழகத்தின் இணை நிர்வாக இயக்குநர் அனில் குமார் கெய்வாட் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in