‘‘ஹேப்பி பர்த்டே மோடி ஜி!’’ – 4 வார்த்தையில் ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து

‘‘ஹேப்பி பர்த்டே மோடி ஜி!’’ – 4 வார்த்தையில் ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து
Updated on
1 min read

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றார். அன்றுமுதல் அவரின் ஒவ்வொரு ஆண்டு பிறந்தநாளும் சேவைநாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த நாளில் நாடுமுழுவதும் மக்களுக்கு பல்வேறு இலவச சேவைகளை பாஜகவினர் வழங்கி வருகிறார்கள். இந்தமுறை இந்த சேவைகளை வழங்குவது 20 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோடி ஜி" என்று மட்டும் தெரிவித்துள்ளார். வேறு எதையும் அவர் குறிப்பிடவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in