Published : 16 Sep 2021 12:14 PM
Last Updated : 16 Sep 2021 12:14 PM

மனதின் குரல்; மக்களிடம் இருந்து சுவாரஸ்யமான யோசனைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி

வானொலியில் வரும் 26-ம் தேதி ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கான கருத்துக்களைப் பகிருமாறு பிரதமர் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் மாதந்தோறும் வானொலியில் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இதற்கான கருத்துகள், தகவல்களை மக்களிடம் கோரி வருகிறார். அந்தவகையில் செப்டம்பர் 26-ம் வானொலியில் ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் 81-வது பதிப்பு நிகழ்ச்சிக்கான தங்களின் யோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பகிருமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சிக்கான யோசனைகளை NaMo செயலி அல்லது MyGov வலைத்தளம் அல்லது 1800-11-7800 என்ற தொலைபேசி எண்ணில் பதிவு செய்யலாம்

இது தொடர்பாக பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
‘‘வரும் 26-ஆம் தேதி ஒலிபரப்பாகவுள்ள இந்த மாதத்திற்கான மனதின் குரல் #MannKiBaat நிகழ்ச்சிக்கு மக்களிடம் இருந்து பல சுவாரஸ்யமான யோசனைகள் கிடைத்த வண்ணம் உள்ளன. உங்களது யோசனைகளை NaMo செயலி அல்லது MyGov வலைத்தளம் அல்லது 1800-11-7800 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்ந்து பதிவுசெய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x