

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் ஜம்மு காஷ்மீருக்கு அக்டோபர் மாதம் பயணம் செய்யஉள்ளார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் முதல்முறையாக அங்கு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 1 முதல் 3ம் தேதி வரை 3 நாட்கள் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மோகன் பாகவத் பயணம் செய்துபல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படாமல் இருந்தபோது ஜம்மு காஷ்மீருக்கு மோகன் பகவத் சென்றிருந்தார். அதன்பின இப்போது செல்லும் மோகன் பாகவத், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், கல்வியாளர்கள், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா வைரஸ் பரவல் இருந்ததால்தான் மோகன் பாகவத் ஜம்மு காஷ்மிருக்குச் செல்லவில்லை. மற்றவகையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழக்கமாகச்செல்லும் பயணம்தான் என்று ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மோகன் பாகவத் பயணம் குறித்து ஆர்எஸ்எஸ்நிர்வாகி ஒருவர் கூறுகையில் “ 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்று ஆர்எஸ்எஸ் தலைவர் செல்வது இயல்பானது. ஆனால் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எந்த இடத்துக்கும் நேரடியாகச் செல்லவில்லை, நிர்வாகிகளையும் நேரடியாகச் சந்திக்கவில்லை.
இப்போது கரோனா தொற்று குறைந்துள்ளதால், ஜம்மு காஷ்மீருக்கு நேரடியாக மோகன் பாகவத் சென்று நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் ஜம்மு காஷ்மீரின் நிலை, முன்னேற்றச் சூழல் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் ” எனத் தெரிவித்தார்