சமூக வலைதளங்களில் கரோனா பற்றி தவறான தகவல் பரப்புவதில் இந்தியா முதலிடம்

சமூக வலைதளங்களில் கரோனா பற்றி தவறான தகவல் பரப்புவதில் இந்தியா முதலிடம்
Updated on
1 min read

கரோனா பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்புவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

‘138 நாடுகளில் கரோனா பற்றிய தவறான தகவல்களின் பரவல் மற்றும் ஆதார பகுப்பாய்வு', சேஜ் சர்வதேச நூலக சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டமைப்பின் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

138 நாடுகளில் உருவான தவறான தகவல்கள் அதன் ஆதாரங்கள் குறித்து சரிபார்க்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் மொத்த சதவீதத்தில் இந்தியாவில் கரோனா பற்றி சமூக வலைத்தளங்களில் 18.07 சதவீதம் அளவுக்கு தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்தியாவில் இணைய பயன்பாடு மற்றும் சமூக ஊடக பயன்பாடு அதிகரிப்பு மற்றும் பயனர்களுக்கு இணைய கல்வியறிவு இல்லாததால் கரோனா பற்றி இந்தியாவில் அதிக அளவில் சமூக ஊடங்களில் தவறான தகவல் பரவியதாக ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவுக்கு அடுத்து அமெரிக்காவில் 9.74 சதவீதம், பிரேசில் 8.57 சதவீதம், ஸ்பெயின் 8.03 சதவீதம் அளவுக்கு கரோனா பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டது தெரியவந்துள்ளது.-பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in