

ஆப்கானிஸ்தானின் தலிபான் தீவிரவாத இயக்கத்துடன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஒப்பிட்டு சமீபத்தில் கவிஞர் ஜாவேத் அக்தர் கருத்து கூறியதற்காக சிவசேனா அவரை கடுமையாக கண்டித்தது. இந்நிலையில், சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ வில் ஜாவேத் அக்தர் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:
எனது சமீபத்திய பேட்டியில், இந்துக்கள் உலகின் மிகவும் ஒழுக்கமான மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட பெரும்பான்மையினர் என்று கூறியிருந்தேன். இந்தியா இயற்கையாகவே ஆப்கானிஸ்தான் போல ஆக முடியாது என்பதையும், இந்தியர்கள் தீவிரவாதிகள் அல்ல என்பதையும் நான் வலியுறுத்தினேன். நடுநிலையுடன் இருப்பது, மிதவாதிகளாக இருப்பது இந்தியர்களின் மரபணுவில் உள்ளது.
இவ்வாறு ஜாவேத் அக்தர் அந்தக் கட்டுரையில் எழுதியுள்ளார்.