Published : 24 Feb 2016 09:04 AM
Last Updated : 24 Feb 2016 09:04 AM

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கார் முற்றுகை: ஜாட் இனத்தவரின் போராட்டத்தில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு

ஹரியாணா மாநிலத்தில் ஜாட் இனத்தவரின் போராட்டம் தீவிர மாக நடைபெற்று வரும் ரோடக் பகுதியில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் மனோகர் லால் கட்டாரின் வாகனத்தை போராட்டக்காரர்கள் முற்றுகை யிட்டனர்.

ஹரியாணாவில் ஜாட் இனத் தவர்கள்,தங்களை இதர பிற்படுத் தப்பட்டோர் (ஓபிசி) பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனப் போராடி வருகின் றனர். 10 நாட்களுக்கு மேல் நடை பெற்று வரும் இப்போராட்டத்தில் ஏராளமான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து 19 உயிர்கள் பலியாகியுள்ளன.

இந்நிலையில், போராட்டத்தின் மைய களமும், ஜாட் இனத்தவர் மிக அதிக அளவில் வசிக்கும் பகுதி யுமான ரோடக்குக்கு முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று பயணம் மேற்கொண்டார்.

அவரின் கார் அங்கு சென்றதும், ஆத்திரத்தில் இருந்த போராட்டக் காரர்கள் காரை முற்றுகையிட்டு, எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பி னர். வன்முறையைத் தடுக்கத் தவறிய காவல் துறைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது.

அவர்கள் மத்தியில் பேசிய கட்டார், “வன்முறையாளர்கள், கொள்ளையடிப்பவர்கள், தனியார் பொது சொத்துகள் மீது சேதம் விளைப்பவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும்” என்றார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட உறுதிமொழிகளையும் அவர் அளித்தார். கடமையிலிருந்து தவறிய அரசு அதிகாரிகள், காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஹிஸார், ஹன்ஸி, பிவானி உள்ளிட்ட நகரங்களில் தடை யுத்தரவு நீடிக்கிறது. தற்காலிக மாக நான்கு மணி நேரம் தளர்த் தப்பட்டது. சில இடங்களில் போக்கு வரத்துக்கான தடைகள் அகற்றப் பட்டு, போக்குவரத்து தொடங்கி யது. அம்பாலா-டெல்லி நெடுஞ் சாலையில் பானிபட் வரை போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது. சில பகுதிகளில் ரயில் பாதைகளில் போடப்பட்ட தடைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

ஜிந்த் பகுதியில் தடையுத்தரவு விலக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ரோடக், சோனிபட் பகுதிகளில் பதற்றம் தொடர்கிறது. பாதிப்புக்கு உள்ளான கிராமங்களில் ராணுவம், காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு கோரும் ஜாட் இனத்தவ ரின் கோரிக்கைகளை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தலைமையிலான குழு பரிசீலித்து வருகிறது.

நீதிமன்றம் உத்தரவு

இதனிடையே, ஜாட் இனத்தவர் போராட்டம் குறித்த அறிக்கையை வரும் திங்கள்கிழமை சமர்ப்பிக் கும்படி ஹரியாணா அரசுக்கு பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் எஸ்.கே மிட்டல், ஹெச்.எஸ் சித்து ஆகியோரடங்கிய அமர்வு இதுதொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.

ராஜஸ்தானில் ரயில் எரிப்பு

ராஜஸ்தான் மாநிலம் பரத்புர் மாவட்டத்தில் ஜாட் போராட்டக்காரர்கள், ரயில் நிலையத்தைச் சூறையாடியதுடன் சரக்கு ரயில் இன்ஜினுக்கும் தீ வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x