பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர திட்டம்: கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர திட்டம்: கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய தயாரிப்புகளின் விற்பனையை சரக்கு, சேவை வரிநடைமுறையின் கீழ் கொண்டுவரவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வரும் வெள்ளிக்கிழமை நடக்க உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

பெட்ரோலிய தயாரிப்புகளை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என்று ஏற்கெனவே பலமுறை விவாதங்கள் எழுந்தன. அதேசமயம் சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இதனால் தங்களின் வருவாய் குறையும் என்பதால் எதிர்ப்புகளையும் எழுப்பி வந்திருக்கின்றன.

இந்நிலையில் தற்போது பெட்ரோலிய பொருட்கள் தொடர்ந்துவிலையேற்றம் அடைந்துவருவ தால் பெட்ரோலிய தயாரிப்பு களை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜிஎஸ்டி நடைமுறைக்குள் பெட்ரோலிய பொருட்கள் கொண்டுவரப்படும் பட்சத்தில் நுகர்வு விலையிலும், அரசின் வருவாயிலும் பெரிய அளவில் மாற்றம்ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது. தற்போது பெட்ரோலிய பொருட்கள் மத்திய அரசின் வரி, மாநில அரசின் வரி விதிப்புகள் காரணமாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விலை என்றவகையில் விற்பனை செய்யப் படுகிறது. அதுமட்டுமல்லாமல் பெட்ரோலிய பொருட்களின் விலையில் பாதிக்கும் மேலான தொகை வரி மட்டுமே ஆகும்.

ஆனால் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு நாடுமுழுவதும் ஒரே விலையில் விற்பனை செய்யப்படும். வரி விகிதமும் முறைப்படுத்தப்படும். இதனால் கணிசமாக நுகர்வோருக் கான விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in