

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
உத்தரபிரதேசத்தில் பாஜகஆட்சிக்கு வருவதற்கு முன்பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தனர். பாஜகவினர்எங்கு சென்றாலும் ‘நாம் எப்போதாவது பாதுகாப்பாக உணர்வோமா?’ என்று மக்கள் கேட்டனர். உ.பி.யின் மேற்கு பகுதிகளில் காளை மாடுகளும் எருமைகளும் கூட பாதுகாப்பற்றநிலையில் இருந்தன. ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை. பாஜக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். காளைகளும் எருமைகளும் கூட பாதுகாப்பாக உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.