

இந்தி தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி உலக அரங்கில் இந்தி தொடர்ந்து வலுவான அடையாளத்தை உருவாக்கி வருவதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியல் நிர்ணய சபை, தேவநாகரி எழுத்து வடிவத்தில் எழுதப்படும் இந்தி மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக, கடந்த 1949-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட செப்டம்பர் 14 ஆம் நாள் இந்தி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்தி தினத்தையொட்டி பல்வேறு தலைவர்களும் இன்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தி தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
"உலக அரங்கில் இந்தி தொடர்ந்து வலுவான அடையாளத்தை உருவாக்கி வருவது உங்கள் அனைவரின் முயற்சியின் விளைவாக நடந்து வருகிறது’’ என்று கூறியுள்ளார்.