Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டுபிடிக்க வரி நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை

புதுடெல்லி

வரி ஏய்ப்பு, வரி செலுத்துவதி லிருந்து தப்பித்தல் போன்ற நடவடிக்கைகளை அடையாளம் காண வரி நடைமுறையை எளிமையாக வைத்திருப்பது அவசியம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

கடன் பத்திரங்கள், பங்குகள் உள்ளிட்டவற்றிலிருந்து வங்கிகள் ஈட்டிய வருமானத்தின் மீதான வரியை வசூலிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வங்கிகளுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேற்கூறிய பத்திரங்கள் மற்றும் பங்குகள் போன்றவற்றில் வங்கிகள் செய்துள்ள முதலீடுகள் மீது கிடைக்கும் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும் என்றுஅரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவை வங்கியின் பொதுவான வர்த்தக கணக்கில் நிர்வகிக்கப்பட்டு வருவதால் தனியாக வரி தணிக்கைக்கு உட்படுத்த முடியாது என்று வங்கிகள் தரப்பு வாதிட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய் கே கவுல் மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வு விசாரித்தது.

அப்போது, பத்திரங்கள் மற்றும் பங்குகள் போன்றவற்றில் வங்கிகள் செய்துள்ள முதலீடுகள் தனிக்கணக்குகள் மூலம் நிர்வகிக்கப்பட வேண்டும் என்று கூறப்படாத நிலையில், அவைபொதுவான வர்த்தகத்துக்குள் ளேயே நிர்வகிக்கப்படுகிறது.

எனவே அதில் வரும் வருமானம்வங்கியின் பொது வருமானமாகத் தான் கருதப்படும். வருமான வரி பிரிவு 14-ல் பொது வருமானத்தில் இந்த முதலீடுகள் மீதான வருமானம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால் இவற்றுக்கு வருமான வரி வசூலிக்க முடியாது. எனவே வருமான வரி பிரிவு 14ஏ இந்த வருமானத்துக்குப் பொருந்தாது என்று தீர்ப்பு வழங் கியுள்ளது.

மேலும், இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படாமல் இருக்க வரி நடைமுறைகளை தெளிவாகவும் எளிமையாகவும் உருவாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

மேலும் நீதிபதிகள், ‘‘வரி ஏய்ப்பு, வரி செலுத்தாமல் ஏமாற்றுவது போன்றவற்றை தவிர்க்க விரும்பும் அரசு, அதற்கேற்ப வரி நடைமுறைகளை தெளிவாகவும், எளிமையாகவும் உருவாக்க வேண்டிய கடமையையும் உணர வேண்டும். இவற்றை சரியாகச் செய்வதன் மூலம் வரி தொடர்பான விவகாரங்களில் தேவையற்ற வழக்குகள், சிக்கல்கள் வராமல் தடுக்க முடியும். அதேசமயம் வருமான இழப்பையும் தடுக்கலாம்’’ என்றனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x