Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

வங்கிகள், ரியல் எஸ்டேட் துறையில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர் விவரங்களை 3-வது முறையாக வழங்குகிறது சுவிஸ் அரசு

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் விவரங்களை 3-வது முறையாக மத்திய அரசிடம் வழங்க உள்ளது அந்நாட்டு அரசு. குறிப்பாக முதன் முறையாக ரியல் எஸ்டேட் சொத்து விவரங்களையும் வழங்க உள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து கருப்பு பண முதலீட்டா ளர்களின் சொர்க்கமாக திகழ்கிறது. இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் தங்கள் கருப்பு பணத்தை (கணக்கில் காட்டாமல்) சுவிட்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்வது வழக்கம்.

இதை அறிந்த இந்தியா உள்ளிட்ட நாடுகள், தங்கள் நாட்டு முதலீட்டாளர்களின் விவரங்களை பெறுவதற்கு ஏதுவாக சுவிட்சர் லாந்து அரசுடன் நீண்ட போராட் டத்துக்குப் பிறகு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன்படி, வரி ஏய்ப்பு உள்ளிட்ட நிதி முறைகேடு புகார்கள் மீதான விசாரணைக்கு தேவைப்படும் விவரங்களை சுவிஸ் அரசு வழங்க வேண்டும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு பலர் தங்கள் சுவிஸ் வங்கி கணக்குகளை முடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

எனினும், இந்த ஒப்பந்தத்தின்படி சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் பற்றிய விவரங்களை ஏற்கெனவே 2 முறை மத்திய அரசிடம் சுவிஸ் அரசு வழங்கியது. அதில் 100-க்கும்மேற்பட்ட தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில், 3-வது முறையாக கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் பற்றிய விவரங்களை இந்த மாதத்துக்குள் மத்திய அரசிடம் சுவிஸ் அரசு வழங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதில் முதல் முறையாக இந்தியர்கள் பெயரில் உள்ள ரியல் எஸ்டேட் சொத்து தொடர்பான விவரங்களும் இடம்பெறும் என கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் இந்தியர்கள் கருப்பு பணத்தை பதுக்குவதைத் தடுக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியில் சுவிஸ் அரசு வழங்கும் தகவல் மிக முக்கிய மைல்கல்லாக விளங்கும்.

இது ஒரு புறம் இருந்தாலும் தொண்டு நிறுவனங்களின் பங்கு பற்றிய விவரங்கள் மற்றும் டிஜிட்டல் கரன்சி முதலீட்டு விவரங்களைப் பெற இந்த ஒப்பந்தத்தில் வழி இல்லை என அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

இதுபோன்ற தகவலையும் வழங்க வேண்டும் என உலக நாடு கள் சுவிஸ் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x